20th of October 2014
சென்னை:சினிமாவுக்கு ஆர்வத்தில் வருபவர்கள் பலர். தகுதியை வளர்த்துக் கொண்டு வருபவர்கள் சிலர் மட்டுமே. இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் ரக்ஷித் விஜய்.
குறும்படங்கள், விளம்பர மாடல் என்று பங்குபெற்ற இவர் தன்னை முறைப்படுத்திக் கொண்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ரக்ஷித் விஜய் ,பள்ளியில் படித்தபோதே எல்லா கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வமுடன் பங்குபெற்றவர்; பரிசுகள் பல பெற்றவர். கல்லூரியில் படித்த போதே பல ஃபேஷன் ஷோக்களில் அடிக்கடி 'ராம்ப் வாக்' செய்தவர்.
ஆனால் இதுமட்டும் போதாது என்கிற உணர்வு ரக்ஷித் விஜயை உந்தித்தள்ளியது. அப்பா அம்மா ஊக்கம் தரவே நடிகராகும் கனவை வடிவமைத்துக் கொண்டார்.அதன்படி மும்பையிலுள்ள கிஷோர் நமித் கபூர் நடிப்புப் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயிற்சியை முடித்தார்.. இங்குதான் ஹிருத்திக் ரோஷன் , அல்லு அர்ஜுன், ராம் சரண், நகுல், யுக்தாமுகி, நீதுசந்திரா, லிசாரே, இம்ரான்கான், லாராதத்தா, பிரியங்கா சோப்ரா, சோனாலி பிந்த்ரே போன்ற இன்று பிரபலமாகி இருக்கும் பலரும் பயிற்சி எடுத்துள்ளனர்.
இப் பயிற்சி நிலையத்திலிருந்து சிறந்த மாணவர் விருதுடன் ரக்ஷித் வெளியே வந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகள் தெரிந்த இவர், இப்போது ஒரு புதிய தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சினிமாவுக்கு ரக்ஷித் விஜய்,தன்னை எப்படித் தகுதியாக்கிக் கொண்டுள்ளார் என்று கேட்ட போது, "கிஷோர் நமித் கபூர் ஒரு பாலிவுட் நடிகர், மேடை நடிகர். நடிப்பில் பெரிய ஜீனியஸ் . ஹிருத்திக் ரோஷன் முதல் நகுல் வரை பல நட்சத்திரங்கள் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான்.அங்கு நடிப்பு பற்றியும் உடல் மொழி பற்றியும் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது.” என்றவரிடம்
எவ்வளவு நுணுக்கமாக கற்றுக் கொள்ள முடிந்தது என்று கூறமுடியுமா? என்ற போது.
"ஒரு நடிகனுக்க்குரிய எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். நடிப்பு, உணர்வுகள் வெளிப்பாடு, உடல் மொழி பற்றி பலவித அனுபவங்களையும் பயிற்சிகளையும் பெற முடிந்தது.
இன்று பாலிவுட் நடிகர்களில் 50 சதவிகிதம் பேர் இங்கு பயிற்சி பெற்றவர்கள்தான். 'நவ்ரஸ்' எனப் படும் நவரச உணர்வுகள் வெளிப்படுத்தும் விதம், முகத்திலுள்ள 50 தசைப் பயிற்சிகள். முதல்நிலை உணர்வுவெளிப்பாடு, இரண்டாம் நிலை உணர்வு வெளிப்பாடு என்று நிறைய கற்றுக் கொண்டோம்.
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் 55 சதவிகிதம் உடல் மொழியும் பேசும் வார்த்தைகள் 7 சதவிகிதம்,தொனி 43சதவிகிதம் என்று பங்குவகிக்கிறது'' என்று நீளமாகப் பேசியவர் 'நடிப்பு என்பது நிஜம் என்று நம்பச் செய்வது' என்று சுருக்கமாகச் சொல்கிறார்.
அப்பா விஜயகுமார் பிஸினஸ்மேன். அம்மா பத்மாவதி குடும்பத்தலைவி, ஒரு சகோதரர். இந்த குடும்பமே ரக்ஷித் விஜய்க்கு ஆதரவும் ஊக்கமும் தருகிறது.
'ஜூஹி சத்தார்' ,'பாகல்' 'டார்லிங்' உள்ளிட்ட எட்டு குறும்படங்களில் பல்வேறுபட்ட பாத்திரங்களில் நடித்துள்ளார் இவர். இவரது நடிப்பைப் பார்த்து இன்ஸ்டிடியூட் மாணவர்கள் பாராட்டியுள்ளனர். பயிற்சியாளர் கிஷோர் நமித் கபூர் 'நீ நல்லா வருவே 'என்று ஆசியுரை வழங்கியுள்ளார்.
உடல் ரீதியாகவும் தன்னை செதுக்கிக் கொண்டுள்ள ரக்ஷித், ஹாண்ட் ஸ்ப்ரிங், பேக் ப்ளிக் ,ஏரியல், பைக் ஹேண்ட் ஸ்பிரிங், முஹாய் தை,. சைடுகிக், ஸ்வீப் கிக் உள்பட பல பயிற்சிகளையும் முடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் ஸ்டைலில் ரஜினியையும் நடிப்பில் கமலையும் பிடிக்கும் என்கிற ரக்ஷித் இளைய நடிகர்களில் தனுஷ்வரை பலரையும் பிடிக்கும் என்கிறார்.

Comments
Post a Comment