5th of October 2014
சென்னை:ரஜினி, கமலை மீண்டும் ஒரே படத்தில் இணைத்து நடிக்க வைக்க முயற்சிகள்
நடக்கின்றன. இந்த முயற்சியில் டைரக்டர் பாலசந்தர் ஈடுபட்டு உள்ளதாக
முன்னாள் கதாநாயகி ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.
கமலும், ரஜினியும் துவக்க காலத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் இணைந்து நடித்தார்கள். முன்னணி நடிகர்களாக உயர்ந்ததும் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.
இருவரும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இருவரின் சம்பளம், படத்துக்கான செலவு போன்றவைகளை காரணம் காட்டி சேர்ந்து நடிக்க சாத்தியம் இல்லை என்று கமல் கூறிவிட்டார்.
ஆனாலும் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க டைரக்டர் பாலச்சந்தர் தீவிரம் காட்டுகிறார்.
ரஜினி, கமலுடன் பல படங்களில் நாயகியாக நடித்த ஜெயப்பிரதா இதுகுறித்து கூறும்போது, சமீபத்தில் எனது குரு டைரக்டர் பாலசந்தரை சந்தித்தேன். அவர் என்னிடம் கமல், ரஜினியை மீண்டும் சேர்த்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். அந்த படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் என்றார். மேலும் ஜெயப்பிரதா கூறும்போது,
என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் நினைத்தாலே இனிக்கும். சலங்கை ஒலி படத்தில் நான் இயல்பாக நடித்து இருந்தேன். அந்த நடிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்தவர் கமலஹாசன்தான் என்றார்.

Comments
Post a Comment