12th of October 2014
சென்னை:கடந்த பல வருடங்களாக தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ரசிக்ரளை சந்திப்பதை
தவிர்த்துவிட்டு, இமயமலைக்கு சென்றுக்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த ஆண்டு
உடல் நிலை சரியில்லாமல் இருந்து மீண்டு வந்த பிறகு, கடந்த பிறந்த நாளன்று
ரசிகர்களை தந்து சென்னை இல்லத்தில் சந்தித்தார்.
அதுமட்டும் இன்றி, அன்றைய தினம் ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்த ரஜினிகாந்த், அன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துக்கொண்டார். தனக்காக பிரார்த்தனை செய்த தந்து ரசிகர்களை ஏமாற்றக்கூடாது, என்று சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், அவர் நடித்த 'கோச்சடையான்' படத்தின் வெளியீட்டின் போது ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்த ரஜினிகாந்த், அப்படம் சம்மந்தமாக ஊடகங்களையும் சந்திக்கவில்லை. கோச்சடையான் இசை வெள்யீட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த் அன்றைய தினமே நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த், தனது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது பா.ஜ.க ரஜினிகாந்தை தந்து கட்சியில் இணைத்துக்கொண்டு தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ரஜினிகாந்தும் வெளிப்படையாக சம்மதமும் தெரிவிக்காமல், இல்லை என்றும் மறுக்காமலும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திப்பது, தனது அரசியல் பிரவேசத்திற்கான அச்காரமாகவும் இருக்கலாமா என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே ரஜினிகாந்தின் ரசிகர்கள் சந்திப்பு சினிமா வட்டாரத்தை காட்டிலும் அரசியல் வட்டாரத்தில் ரொம்பவே ஆர்வமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments
Post a Comment