ரன்பீர்-கத்ரீனா அடுத்தாண்டு பிப்ரவரியில் திருமணம்!!!

27th of October 2014
சென்னை:
பாலிவுட்டின் காதலர்களான ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் இவர்கள் தங்களது காதலை மறைத்து வந்த நிலையில், இப்போது வெளிப்படையாக தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
பொது இடங்களிலும் ரொம்ப கூலாக சுற்றுகின்றனர். இவர்களது காதலுக்கு இருவரது வீட்டிலும் எந்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் காதலர்களாக இருக்கும் ரன்பீரும்-கத்ரீனாவும் தங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்.

அதாவது திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். ரன்பீரின் அம்மா உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அவரை திருமணம் செய்ய சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

அதன்படி, இவர்களது திருமணம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்கும் என தெரிகிறது.
 
இதனிடையே சமீபத்தில் தான் ரன்பீரும், கத்ரீனாவும்
மும்பையில், பந்தரா பகுதியில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளனர்.

Comments