வடசென்னையின் இன்னொரு முகத்தை காட்ட வரும் ‘ஆக்கம்’!!!

13th of october 2014
சென்னை:வடசென்னையை மையமாக வைத்து வருடத்திற்கு நாலு படங்களாவது வந்துவிடுகின்றன. சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில்  வெளியான ‘மெட்ராஸ்’ திரைப்படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை அவர்கள் அருகில் சென்று படம்பிடித்துக் காட்டியது.

இப்போது வடசென்னை மக்களின் இன்னொரு புதிய முகத்தை காட்டும் விதமாக உருவாகி வரும் படம் தான் ‘ஆக்கம்’. இயக்குனர் மு.களஞ்சியத்திடம் துணை இயக்குனராக இருந்த வேலுதாஸ் ஞானசம்பந்தம் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்..


இது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல் தானாம். ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. அவன் எப்படி, எந்த சூழலில் வளர்கிறான் என்பதை வைத்தே, அவன் வாழ்க்கை, எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு.

இந்தப்படத்தில் கதாநாயகனாக சதீஸ்ராவண் என்பவர் அறிமுகமாகிறார். கேரளாவை சேர்ந்த வைதேகி கதாநாயகியாக நடிக்கிறார். ரஞ்சித், பவர்ஸ்டார் சீனிவாசன், டான்ஸ்மாஸ்டார் தருண்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது.

Comments