பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க ஜி” – விஜய்சேதுபதியை திருப்பி அனுப்பிய டான்ஸ்மாஸ்டர்!!!

22nd of October 2014
சென்னை:ஆல் ஏரியாவில் கலக்கினாலும் விஜய்சேதுபதி வீக்காக இருக்கும் ஏரியா டான்ஸ்தான்.. இது அவரே ஒப்புக்கொள்ளும் விஷயம்.. படங்கள் பிக்கப்பாகி வளர ஆரம்பித்ததும் ஒன்றரை வருஷம் முன்னாடி  ஒரு டான்ஸ் மாஸ்டரிடம்  நடனப்பயிற்சிக்காக சேர்ந்தாராம் விஜய்சேதுபதி..

நல்லா டான்ஸ் ஆடுறவங்கள விட்டுட்டு என்னை மாதிரி ஆடத்தெரியாதவங்களை  போகஸ் பண்ணி பயிற்சி கொடுத்தார் மாஸ்டர்.. ஆனால் அவரே ஏன் சார் பணத்தை இப்படி வீணாக்குறீங்கன்னு சொல்லி என்னை அனுப்பிட்டார் என்று வருத்தப்படும் விஜய்சேதுபதிக்கு தன்னை கனவிலும் பயமுறுத்தும் டான்ஸை எப்படியாவது கைக்குள் கொண்டுவந்துவிடவேண்டும் என்பது தான் லட்சியாமாம்.
 

Comments