விஜய்யின் அடுத்த படத்தின் கதை – பரவும் தவறான தகவல்கள்!!!

24th of October 2014
சென்னை:சமீபத்தில் வெளியான கத்தி படம் உலகமெங்கும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு முதல் நாள் வசூல் 20 கோடிக்கும் மேலே தாண்டியிருக்கிறது. மேலும் கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்த படம் ஒரு சரித்திர படமாக உருவாகப் போகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் கதை என்று சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வந்தார்கள்.

அதாவது சிம்புதேவன் படத்தின் கதை சரித்திர படம் என்பது உண்மையே, இப்படத்திற்கு மாரீசன் என்று தலைப்பு வைத்ததும் உண்மையே. இப்படத்திற்காக ஈசிஆரில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்படத்தில் விஜய் 100க்கும் மேற்பட்ட குள்ளர்களிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை என்பது மட்டும் பொய். படம் விஜய்க்கு உரிய அதே மாஸுடன் தான் இருக்கும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.
 
இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments