1st of October 2014
சென்னை::கவிப்பேரரசு வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து தனது பத்தாவது புத்தகத்தை, அதாவது மூன்றாவது நாவலை எழுதியுள்ளார். நாவலின் பெயர் ‘மெய்நிகரி’. கிழக்கு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டு இந்த நூலை வெளியிட்டார்.
இந்த நாவல் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழும் ரியாலிட்டி ஷோ பற்றிய கதை. தற்போது இந்த கதைக்கு டிமான்ட் அதிகரித்துள்ளது. இந்த நாவலை படமாக தயாரிக்க விரும்புவதாக பல தயாரிப்பாளர்கள் கபிலனை அவ்வப்போது முற்றுகையிட்டு வருகிறார்கள். தயாரிப்பாளர்களின் கண்காணிப்பு வளையத்தில்இருந்தாலும் கூட, கபிலன் இன்னும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார்.
Comments
Post a Comment