24th of October 2014
சென்னை:இந்த வருட தீபாவளிக்கு இளையதளபதியின் கத்தி படமும், விஷாலின் பூஜை படமும் திரையரங்குகளில் வெளியாகி தீபாவளியின் ஸ்பெஷல்லாக அமைந்தன.
பூஜை படம் ஒரு பிரச்சனை இல்லாமல் சுமுகமாக வெளியானது ஆனால் கத்தி படத்துக்கோ படத்தை வெளியிட கூடாது என்று பல்வேறு பிரச்சனைகள் நடந்தது.
அதிலும் கத்தி படம் வெளியாவதற்கு முன்தினம் கத்தி படத்தை தயாரித்திருக்கும் லைக்கா நிறுவனத்தின் பெயரை அகற்ற வேண்டும் என்று ஒரு சில தியேட்டர்கள் மீது பெட்ரோல் குண்டு விசப்பட்டன.
வேறு வழியில்லாமல் லைக்கா நிறுவனத்தின் பெயரை அகற்றி தீபாவளியன்று கத்தி படத்தை வெளிட்டனர்.
நேற்று சென்னையில் உள்ள ஒரு ப்ரிவியூ தியேட்டரில் விஜய் நடித்திருக்கும் கத்தி படமும், விஷால் நடித்திருக்கும் பூஜை படமும் வெவ்வேறு தியேட்டர்களில் டெக்னீசியன்களுக்காக திரையிடப்பட்டிருந்தது.
பூஜை படத்தை பார்த்து கொண்டிருந்த விஷால், விஜய் கத்தி படத்தை பார்க்க வந்திருப்பதை அறிந்ததும் திரையை விட்டு வெளியே வந்து விஜய்யை வரவேற்றார்.
பின் இருவரும் சிறிது நேரம் பேசி கொண்டு அவர்கள் இருவரும் படங்கள் வெற்றி பெற ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிகொண்டார்கள்.
Comments
Post a Comment