அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் நடைபெறும் 'ஐ' பட பிரிமீயர் காட்சிகள்!!!

15th of October 2014
சென்னை:ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'ஐ' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த படம், பணிகள் முடிவடையாததால், அடுத்த மாதம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

வெளியீட்டு தேதி தள்ளிப் போனாலும், படம் குறித்த பரபரப்பை மற்றும் குறையாமல் இருக்க அவ்வபோது, பல பிரம்மாண்ட ஏற்பாடுகளை தயாரிப்பு தரப்பில் செய்து வருகிறார்கள்.


அந்த வகையில், ஐ படத்தின் பிரிமியர் காட்சிகள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் இசை வெளியீட்டு எப்படி ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவைத்தார்களோ, அதே போல பிரிமியர் காட்சியிலும் பல்வேறு ஹாலிவுட் நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்களாம். இதில் முக்கியமானவர் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலன். இவர் இரு நாடுகளில் நடைபெறும் ஏதாவது ஒரு பிரீமியர் காட்சியில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளாராம்
.

Comments