2nd of October 2014
சென்னை:மலையாள படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்த ஹன்சிகாவுக்கு மல்லுவுட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இந்நிலையில், மலையாள படத்தில் திலீப் ஜோடியாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால் இதை மறுத்தார் ஹன்சிகா. இதுபற்றி அவர் கூறும்போது, ‘மலையாள படத்தில் நான் நடிக்கப் போவதாக வதந்தி கிளப்புகிறார்கள். ஆனால் எந்த மலையாள படத்திலும் நான் நடிக்கவில்லை‘ என்றார். அவரது பேட்டி மல்லுவுட் ரசிகர்களையும், திலீப் ரசிகர்களையும் கோபப்படுத்தி உள்ளது. மலையாள படத்தை ஹன்சிகா இழிவு படுத்திவிட்டதாக இணைய தளத்தில் தாக்கியும், திட்டியும் கருத்துக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே அவர் நடித்த பல்வேறு படங்கள் பற்றியும் விமர்சித்திருக்கின்றனர். இதையறிந்து ஹன்சிகா ஷாக் ஆகி உள்ளார். ஹன்சிகா தற்போது தமிழில் ‘மீகாமன்‘, ‘ரோமியோ ஜூலியட்‘, ‘வாலு‘, ‘ஆம்பள‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Comments
Post a Comment