2nd of October 2014
சென்னை:நடிகர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்க சிலர் அவர்களை சுற்றி வந்த வண்ணம் இருப்பது வழக்கம். ரஜினி, கமல் விஷயத்தில் பல ஆண்டுகள் குளிர் காய்ந்தவர்கள் இருவரும் நட்பாக கைகோர்த்தவுடன் காணாமல் போனார்கள். அதேபோல் திரிஷா-நயன்தாராவுக்கு இடையே பகையை வளர்க்கும் வகையில் சிலர் ஒருவரை பற்றி ஒருவருக்கு போட்டுக் கொடுத்து வந்தனர். அவர்களின் நிலையும் சமீபத்தில் பரிதாபத்தில் முடிந்தது.
திரிஷாவும், நயன்தாராவும் திடீரென நட்பாக பழக ஆரம்பித்ததுடன் திரிஷாவின் பிறந்த நாளுக்கு அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து கூறினார் நயன்தாரா. சமீபத்தில் இப்படியொரு சூழலில் ஸ்ருதிஹாசன், தமன்னா சிக்கினர். அவரை பற்றி இவரும், இவரைப்பற்றி அவரும் மறைமுகமாக தாக்கி தங்களது பேட்டியில் கருத்து தெரிவித்து வந்தனர். என்ன நடந்ததோ தெரியவில்லை இருவரும் திடீர் தோழிகள் ஆகிவிட்டனர்.
தமன்னா ஹீரோயினாக நடித்த ‘ஆகடு‘ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும்படி ஸ்ருதி ஹாசனை கேட்டனர். அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சிலர் தங்களது கணிப்புகளை கூறினர். அவர்களின் வாயடைக்கும் வகையில் ஓ.கே சொன்னார் ஸ்ருதி ஹாசன். அத்துடன் இருவரும் ஒன்றாக சேர்ந்து நின்று செல்பி புகைப்படம் எடுத்து அதை இணையதள பக்கத்தில் வெளியிட்டனர்.
Comments
Post a Comment