9th of October 2014
சென்னை:தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் அறிமுகமானவர் சார்மி. ஆனால் தொடர்ந்து தமிழில் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தமிழ்ல இருந்து தெலுங்கு சினிமா பக்கம் போன சார்மி நடிச்ச பல தெலுங்கு படங்கள் பாக்ஸ் ஆஃபீஸ்ல ஹிட் ஆச்சு. அதனால அவரை தலையில தூக்கி வைக்காத குறையா கொண்டாடுச்சு ஆந்திர சினிமா.

அங்கே தனது திறமை மற்றும் கவர்ச்சியை சரியான விதத்தில் வெளிப்படுத்தியதால் ஆந்திர முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். ஆனால் முன்னைப்போல வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாவிட்டாலும் எந்த மொழியாக இருந்தாலும் நடிப்புக்கு தீனிபோடும் கதாபாத்திரங்களை தேடி வருகிறார் சார்மி. அப்படி வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் தற்போது கோலிவுட்டில் ஒரு பாடலுக்கு தலைகாட்டும் வாய்ப்பு சார்மிக்கு கிடைத்திருக்கிறது.
இது விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்காகவாம். இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வழக்கமான குத்துப்பாடலாக இல்லாமல் ஒன்பது நிமிடம் இடம்பெறும் இந்த நீளமான பாடலில் நடனம் ஆடாமல் ஜஸ்ட் லைக் தட் ஒரு கேரக்டராகவே வந்து போகிறாராம் சார்மி.
Comments
Post a Comment