ஐ.விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத விஜய்!!!

2nd of October 2014
சென்னை::கடந்த 15ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. பல மாதங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் என்பதால், ஐ டீஸர் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த டீஸரை 12 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதோடு நில்லாமல் 3 நாட்களில் 25 லட்சம் பார்வையாளர்களையும் ஒரு வாரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்தது.

தற்போது மேலும் ஒரு சாதனையாக 15 நாட்களில் 70 லட்சம் ‘யு டியூப்’ பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமேயானால் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றுவிடும். அப்படி நிகழ்ந்தால் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்ற முதல் தென்னிந்திய சினிமா என்கிற மகுடம் ஐ படத்திற்கு உண்டு. மேலும் இந்த டீஸர குறித்து பல பிரபலங்கள் தங்களது டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். அதில் ” ‘ஐ’ டீஸரை குறிப்பிட்டு பாராட்டிய இயக்குனர் ராஜமெளலி, தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார். இதனிடையே ‘ஐ’ படத்தின் டீஸருக்கு போட்டியாக களத்தில் இறங்கிய விஜய் நடித்த கத்தி படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பில்லை. இந்த டீஸர் வெளியாகி கிட்டத்தட்ட 13 நாட்கள் ஆன நிலையில்கூட இன்னும் 20 லட்சம் பார்வையாளர்களைக்கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments