3rd of October 2014
சென்னை:மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படத்தில் ஹீரோவாக மம்முட்டியின் மகனும் ‘வாயை மூடி பேசவும்’ ஹீரோவுமான துல்கர் சல்மான் நடிக்கிறார் என்பது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கதாநாயகியாக அலியா பட நடிக்கலாம் என தெரிகிறது. இந்தப்படத்தை பொறுத்தவரை இரண்டு சிறப்புகள் உண்டு..
1991ல் ‘தளபதி’ படத்தில் மம்முட்டியை நடிக்கவைத்து அவருக்கு தமிழ்சினிமாவில் ஒரு நிலையான இடத்தை அமைத்து கொடுத்தவர் மணிரத்னம். இப்போது 23 வருடங்களுக்கு பிறகு அவர் மகனான துல்கர் சல்மானையும் இயக்குவது சாதாரண இயக்குனர்களுக்கு சாத்தியப்படும் காரியமா என்ன?
அதேபோல மணிரத்னத்தின் ஒவ்வொரு படத்திலும் அவரது கண்களாக இருந்து செயல்பட்டவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ‘அலைபாயுதே’ படத்தை தொடர்ந்து அவரும் 14 வருடங்கள் கழித்து மீண்டும் மணியுடன் இணைகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 6ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.
Comments
Post a Comment