குழந்தைகள் தின ஸ்பெஷலாக ‘காவியத்தலைவன்’ ரிலீஸ்!!!

27th of October 2014
சென்னை:
ஜிகர்தண்டா’ மூலம் இந்த வருடம் சித்தார்த்துக்கு உற்சாகமாகவே தொடங்கிவிட்டது. இருந்தாலும் அவர் நீண்ட நாட்களாகவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் வசந்தபாலனின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தைத்தான்.

சக நடிகராக பிருத்விராஜ், வேதிகா நடிக்கும் இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது ஹைலைட்டான விஷயம்.. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டான நிலையில் படத்தை குழந்தைகள் தினமான நவம்பர்-14ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு தான் தணிக்கை குழுவினர் இந்தப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments