ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோக்கள்!!!

24th of October 2014
சென்னை:வாலி, குஷி, வேட்டையாடு விளையாடு, சந்திரமுகி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகை ஜோதிகா, கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு தியா, தேவ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா மீண்டும் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் நடிக்க ஜோதிகா ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு சூர்யா அனுமதி கொடுத்ததோடு, தன்னுடைய 2டி நிறுவனம் மூலமே இந்த படத்தை தயாரிக்கின்றார்

இந்த படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பதால் முன்னணி கதாநாயகர்கள் யாரும் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க முன்வரவில்லை. இந்நிலையில் புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், கல்கி, போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்த ரகுமான், ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.


இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே அவர்களே தமிழில் இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் சமூக விழிப்புணர்வு உள்ள திரைப்படம் என்பதால்தான் ஜோதிகா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், மற்றபடி தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் ஜோதிகா தெரிவித்துள்ளார்.

Comments