தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் கத்தி படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்ட அனிருத்!!!

15th of October 2014
சென்னை:தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துவிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் பின்னணி இசைக் கோர்வைகளை முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,


‘கத்தி’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. என்னுடைய பிறந்தநாளுக்கு முன்னதாக இந்த வேலையை முடித்துவிட்டது மகிழ்ச்சி. தீபாவளிக்கு பட்டாசு ரெடியாகிவிட்டது என குஷியாக டுவிட் செய்துள்ளார்.

‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில், விஜய் ‘செல்பிபுள்ள’ என்று தொடங்கும் பாடலை தனது குரலில் பாடியுள்ளார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

Comments