இந்த வருடத்தில் தனுஷ் எதிர்பார்த்த மூன்று படங்கள்!!!

20th of October 2014
சென்னை:நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்ட தனுஷ், அமிரா தஸ்தூர், கார்த்தி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிவரும் அனேகன் படம் இந்த வருட கடைசியில் திரைக்கு வரவிருக்கிறது.

 ஏற்கனவே தனுஷுக்கு இந்த வருடத்தில் வெளியான வேலை இல்லா பட்டதாரி பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது, அதை அடுத்து அவர் இந்த படத்தின் வெளியீட்டை நோக்கி காத்திருக்கிறார்.
 
அதே போல தனுஷ் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, விஜய், சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள கத்தி திரைப்படத்தை காணவும், அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள பி.கே என்ற படத்தையும் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Comments