சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு: சிம்பு விளக்கம்!!!

2nd of October 2014
சென்னை:சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின.

இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.


இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு உள்ளோம். அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் துவங்கும். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

Comments