14th of October 2014
சென்னை:சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி வெற்றி பெற்றுள்ளார்.
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக திரைப்பட வசனகர்த்தா லியாஸ் அலிகான் செயல்பட்டார். மொத்தமுள்ள 1,300 வாக்குகளில் 700-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகள் கொண்ட வாக்குப் எண்ணிக்கையின் தொடக்கம் முதலே நடிகை நளினி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 273 வாக்குள் பெற்று நடிகை நளினி வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

Comments
Post a Comment