பழங்குடியின மக்களின் வாழ்க்கையை படமாக்கப் போகும் ரஞ்சித்!!!

13th of october 2014
சென்னை:அட்டகத்தி' என்ற தனது முதல் படத்தில் சென்னையில்  புறநகர் பகுதி இளைஞர்களின் வாழ்க்கையை சொன்ன இயக்குனர் ரஞ்சித், தந்து இரண்டாம் படமான 'மெட்ராஸ்' படத்தில் வட சென்னை பற்றியும், அங்கு நடக்கும் அரசியல் குறித்தும் சொல்லியிருந்தார்.

மக்களிடையே மட்டும் இன்றி, திரையுலக பிரபலங்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் குறித்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், தனது மூன்றாவது படத்தில் பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பற்றி ரஞ்சித் சொல்லப் போகிறாராம்.

இப்படத்தை ஸ்டியோ க்ரீன் நிறுவ்னாம் தயாரிக்கிறது. இதில் நாயகனாக ஆர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

Comments