என்னால் காத்திருக்க முடியாது” – ராஜேஸ் – ஆர்யா இணையும் படம் பற்றி தமன்னா வாய்ஸ்!!!

11th of October 2014
சென்னை:ஒரு சிறிய தேக்கநிலைக்கு பிறகு மீண்டு(ம்) வருகிறார் இயக்குனர் ராஜேஸ். தற்போது அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக மீண்டும் அவருடன் இணைகிறார் ஆர்யா. அதுமட்டுமல்ல, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிக்கு ராஜேஸுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக படத்தையும் தனது சொந்த நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலமாகவே தயாரிக்கவும் செய்கிறார் ஆர்யா. ராஜேஸின் நண்பன் சந்தானம் இல்லாமலா..? வழக்கம் போல அவருக்கான இடம் அவருக்குத்தான்.
ஆர்யாவுடன் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் தமன்னா. ராஜேஸ் படத்தில் நடிப்பதென்றாலே ஜாலியான அனுபவம் தானே.. அதனால் தான் தமன்னாவும் கூட, ”ராஜேஸ் சார் படத்தில் எப்போது நடிப்போம் என்றிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் நாள் வரை காத்திருக்க முடியாது போல தெரிகிறது. சீக்கிரமே படப்பிடிப்பு துவங்காதா, செட்டுக்கு போகமாட்டோமா என மனம் ஏங்குகிறது” என்கிற ரேஞ்சில் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
 

Comments