11th of October 2014
சென்னை:சிலதினங்களாக நடிகர் மோகன்லாலின் அதிகாரப்பூர்வ இணையயளத்தை பாகிஸ்தானை சேர்ந்த சில விஷமிகள் முடக்கியுள்ளனர். இந்த இணையதள முகவரிக்கு சென்றால் பாகிஸ்தானின் தேசியகொடி பறக்கிற மாதிரியும் செட்டிங் பண்ணியிருந்தார்கள்.
மேலும் “இதில் எங்கள் இலக்கு உங்களது அரசுத்துறை இணைய தளங்கள்தான்.. ஜம்முவிலும் காஷ்மீரிலும் நடந்த உங்களின் மனிதாபிமான விரோத செயல்களை மறக்க மாட்டோம். லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இந்திய ராணுவம் காஷ்மீரி குடும்பங்களை, அப்பாவி குழந்தைகளைக் கொன்றிருக்கிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன்லாலின் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் ரயில்வே இணையதளம் மற்றும் இன்னும் இரண்டு இணையதளங்களை முடக்கினார்கள். மேலும் அதில் மோகன்லாலின் ‘ஸ்படிகம்’ திரைப்பட போட்டோ ஒன்றை பதிவிட்டு அவரது புகழ்பெற்ற டயலாக்கான ‘நீ போ மோனே தினேஷா’வையும் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர பாகிஸ்தான் பீப்பிள் பார்ட்டி (பாகிஸ்தான் மக்கள் கட்சி)யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஒருவர், அடுத்தமுறை இதேபோல எங்கள் இணையதளம் முடக்கப்பட்டது என்றால் அடுத்ததாக பாக் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே முடக்குவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள். சும்மா சொல்லக்கூடாது லாலேட்டனின் ரசிகர்கள் படு சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்கள்.
Comments
Post a Comment