1st of October 2014
சென்னை::இன்னைக்கு தேதியில் இதெல்லாம் நடக்குமா என்ன..? போய் ஆகவேண்டிய வேலைகளை பாருங்கள் என அவ்வளவு சுலபமாக இந்த விஷயத்தை ஒதுக்கிவிடமுடியாது. காரணம் இது பவர்ஸ்டார் நடித்துள்ள படம் அல்ல. சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் நடித்துள்ள படம். அதுதான் ‘நீ நான் நிழல்’. இந்தப்படம் ரிலீசாகும் முதல் நாள் மட்டும் அனைவருக்கும், குறிப்பாக டீனேஜ் பருவத்தில் இருக்கும் மாணவர்கள் என்பதற்காகவே இலவச டிக்கெட் தர முடிவு செய்திருக்கிறார்கள்.
காரணம் இன்றைய இளம் பருவத்தினரிடையே இணையதளங்கள் மற்றும் சோஷியல் நெட் ஒர்க்குகள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன.. அது அவர்களுடன் சேர்ந்து அவர்களது பெற்றோரையும் எந்த அளவு பாதிக்கிறது என பொட்டில் அடித்தாற்போல சொல்லும் வகையில் கதை இருக்கிறதாம்.
அதாவது நம்மை பின் தொடரும் நிழல் கூட நமக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதால், மாணவர்கள் உட்பட பெற்றோர்களும் பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ‘இலவச காட்சி’ திட்டமாம். இந்தப்படத்தின்இயக்குனர் ஜான் ராபின்சன், ‘சொர்ணமுகி’,
தொட்டாச்சிணுங்கி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கே.எஸ்.அதியமானிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தவர்.
இந்தப்படத்தில், சமூகத்துக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் அன்வர் அலி என்கிற மலேசியன் போலீஸ் ஆபிசராக நடித்துள்ளார் சரத்குமார். இளம் ஜோடிகளாக அர்ஜூன் லால் – இஷிதா நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ் கே..ஜெயன். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். முக்கால்வாசிக்கு மேல் மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால் இவர்கள் எல்லோரும் நம்பியிருப்பது தமிழ் சினிமா மார்க்கெட்டைத்தான்.
அதனால் தான் படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரித்துள்ளார்களாம். அதனால் தான் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நேற்று முன் தினம் சென்னையிலே நடத்தியுள்ளார்கள்… இந்த விழாவில்இயக்குனர் கே.எஸ்.அதியமான், விதார்த், பாடலாசிரியர் சினேகன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment