ரஜினி முருகனுக்கு ஜோடியாக ரஜினி நாயகி மகள்!!!

1st of October 2014
சென்னை::வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் தான் ‘ரஜினி முருகன்’.. இது ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவரின் பெயர். இதில் சிவாவுக்கு ஜோடியாக தமன்னா அல்லது லட்சுமி மேனன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் என தெரிகிறது.

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு ‘நெற்றிக்கண்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ‘ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்’ என டூயட் பாடிய நடிகை மேனகாவின் செல்ல மகள் தான் இந்த கீர்த்தி சுரேஷ்.. ரஜினி முருகனுக்கு ஜோடியாக ரஜினியுடன் நடித்த நாயகியின் மகளே நடிக்கிறார் என்றால் என்ன ஆச்சர்யம் பாருங்கள்..!
 
கீர்த்தி இப்போது மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அறிமுகமான காலகட்டத்திலேயே மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கீதாஞ்சலி’ மற்றும் திலீப்புடன் ‘ரிங் மாஸ்டர்’ என இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவிட்டார் கீர்த்தி. இது தவிர தமிழில் தற்போது தயாராகி வரும் ‘மானே தேனே பேயே’ படத்திலும் இவர்தான் நாயகியாக நடிப்பார் என தெரிகிறது…..

Comments