3 வருடத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள சமந்தா!!!

24th of October 2014
சென்னை:தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் இருப்பதை, அவர்கள் இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோவிலில் சாமி கும்பிட்டு உறுதிப் படுத்தினார்கள். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தங்களுடை காதலை தெரிவிக்க வில்லை என்றாலும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சித்தார்த் நடித்த பட நிகழ்ச்சி ஒன்றிலும் சமந்தா கலந்துக்கொண்டார்.

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சமந்தா, தனது திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், “இன்னும் 3 வருடங்களில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது தான் நல்லது. அப்போது தான் எனது குழந்தைகளையும் வளர்க்க முடியும். ஒரு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிப்பேன். அதன்பிறகு சீக்கிரமே சினிமாவில் நடிப்பதை விட்டு விடுவேன்.” என்று கூறியுள்ளார்.

ஆனால் சமந்தா யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது பற்றிய விவரம் எதையும் அதில் தெரிவிக்கவில்லை.

Comments