3 ஹீரோயின்களும் ரி என்ட்ரி கொடுக்கிறார்கள்!!!

24th of October 2014
சென்னை:மலையாள நடிகை மஞ்சு வாரியார் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மஞ்சு வாரியார் ஹவ் ஓல்ட் ஆர் யு என்ற படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார் அப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்து அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
 
தற்போது அப்படம் தமிழிலும் ரி மேக்காகிறது முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என பிசியாக இருந்தார்.

தற்போது ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தின் ரி மேக்கில் தமிழில் ரி என்ட்ரி கொடுக்கிறார் இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் அன்ட்ருஸ் இயக்க சூர்யா தனது 2 டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
தமிழில் ரி மேகக் ஆவதுபோல் ஹிந்தியிலும் அப்படம் ரி மேக்காகிறது ஹிந்தி ரி மேக்கில் நடிகை கஜோல் நடிக்கிறார், அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டபிறகு சினமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது இப்படத்தின் மூலம் இவரும் ரி என்ட்ரி கொடுக்கிறார் இப்படத்தை அவரது கணவர் அஜய் தேவகன் தயாரிக்கிறார்.
மலையாள நடிகையான மஞ்சு வாரியருக்கும், தமிழ் நடிகையான ஜோதிகாவுக்கும், ஹிந்தி நடிகையான கஜோலுக்கும் என இந்த மூன்று முன்னணி நடிகைகளுக்கும் ஹவ் ஓல்ட் ஆர் யு படம் ரி என்ட்ரியாக அமைந்து இருக்கிறது.

Comments