27th of October 2014
சென்னை:ஈ.சி.ஆர் என அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் சினிமா படப்பிடிப்பு நடத்த பல வசதியான பங்களாக்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. ஆனால் மிகப்பெரிய செட் போடவேண்டுமென்றால் வடபழனியை சுற்றியுள்ள ஸ்டுடியோக்களில் மட்டுமே இடம் கிடைத்து வந்தது.

ஆனால் இப்போது ஈ.சி.ஆர் ரோட்டிலேயே உத்தண்டியில் ஆதித்யாராம் என்கிற மிகப்பெரிய ஸ்டுடியோ அனைத்து வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1௦ மற்றும் 15 ஏக்கர் என மொத்தம் 25 ஏக்கர் பரப்பளவில் இரண்டு படப்பிடிப்பு தளங்கள் இதனுள் அடக்கம்.
இந்த ஸ்டுடியோவில் தக்க பாதுகாப்பு வசதிகள் மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல.. இந்த ஸ்டுடியோ அமைந்துள்ள இடம் சென்னை லிமிட்டுக்குள்ளேயே வருவதால் உள்ளூர் பேட்டாவிலேயே பட்டப்படிப்பை நடத்திவிடாலாம்.
கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் வரலாற்று கால கோவில் செட் இங்கேதான் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் செட்டும் இங்கே தான் அமைக்கப்பட்டுள்ளது. சினிமா, சீரியல், விளம்பரப்படம் எதுவானாலும் இந்த ஸ்டுடியோ அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது என்கிறார்கள்.
Comments
Post a Comment