இ்ன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் அக்டோபர் 22, 2014!!!

22nd of October 2014
சென்னை:இன்று, 2014 அக்டோபர் 22 புதன்கிழமை தீபாவளி தினத்தன்று இரண்டு திரைப்படங்கள் மட்டுமே ரிலீஸாகியுள்ளன.
 
1. கத்தி
 
லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கிறார். ஹீரோயின் சமந்தா. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இப்படம் தமிழகம் முழுவதிலும் 440 தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. உலகம் முழுவதும் 1100 தியேட்டர்களில் ரிலீஸ் என்று தயாரிப்பு நிறுவனம் சொல்கிறது..!

2.பூஜை
 
இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம். விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலே இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பிரியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வி.டி.விஜயன் எடிட்டிங் செய்திருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எ 
ழுதி, இயக்கியிருக்கிறார் ஹரி.
 
இந்தப் படம் தமிழ்நாட்டில் 375 தியேட்டர்களிலும், கேரளாவில் 70 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 473 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 47 தியேட்டர்களிலும் மற்றும் வெளிநாடுகளில் 143 தியேட்டர்களையும் சேர்த்து மொத்தம் 1108 தியேட்டர்களில் ரிலீஸாகிறது..!
 
விஷாலின் திரைப்படம் இத்தனை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்..!
 
இருக்கின்ற முதன்மையான தியேட்டர்களை இவை இரண்டுமே
பங்கு போட்டுக் கொண்டதால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.. பாவம்தான்..!

Comments