8th of October 2014
சென்னை:கடந்த வாரம் திரைக்கு வந்த, ஹ்ரித்திக் ரோஷன், காத்ரீனா கைப் நடித்துள்ள ‘பேங் பேங்’ படம் இந்தியாவில் மட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இதில் வெளிநாடுகளையும் சேர்த்தால் மொத்தம் இந்த எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டும். இந்தியப் படமொன்று இவ்வளவு அதிக திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.
பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியான இந்தப்படம், வெளியான ஐந்து நாட்களுக்குள்ளேயே 2௦௦ கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்தியாவில் 156. 41 கோடியும் வெளிநாடுகளில் 45.10கோடி என இதுவரை மொத்தம் 201.51 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களின் வசூலையெல்லாம் தகர்த்து முதலிடத்தை பிடித்துள்ளது ‘பேங் பேங்’. மத்திய கிழக்கு நாடுகளில் ‘தூம்-3’ படத்தை தொடர்ந்து இரண்டாவது பெரிய ஓப்பனிங் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளது. தவிர பாகிஸ்தானிலும் புதிய வசூல் ரெக்கார்டை படைத்துள்ளது.
Comments
Post a Comment