11th of October 2014
சென்னை:ஏ.ஆர்.முருகதாஸின் பள்ளியில் இருந்து வெளிவந்திருக்கும் மாணவர் ஆனந்த்ஷங்கர் இயக்கிய படம் தான் ‘அரிமாநம்பி’. முதல் படத்திலேயே தனது குருநாதரின் பெருமையை காப்பாற்றி இருக்கிறார்.. மந்திரியை சாதாரண இளைஞன் எதிர்க்கும் வழக்கமான ஆக்ஷன் கதைக்கு இன்றைய லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்து விறுவிறுப்பு காட்டியிருந்தார் ஆனந்த் ஷங்கர்.
ரசிகர்களை ரெண்டு மணி நேரம் சீட் நுனிக்கு கொண்டுவந்து உட்கார வைத்திருப்பதிலேயே அவரின் வெற்றி உறுதி ஆனது. ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறவேண்டிய அளவுக்கு விறுவிறுப்பான கதை கிடைத்தால் விடுவாரா விக்ரம் பிரபு. இந்தப்படத்தின் கதாநாயகனாக துரத்தல், துப்பாக்கி என புகுந்து விளையாடி இருந்தார்.
கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் இத்தனை சிறப்பபம்சங்களுடன் வெளியான இந்தப்படம் சென்னையில் உள்ள மூன்று தியேட்டர்களில் வெற்றிகரமாக இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது. விக்ரம் பிரபுவின் ‘சிகரம் தொடு’ வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவரது முந்தைய படம் நூறாவது நாளை தொட்டிருப்பது ஆச்சர்யமான நிகழ்வுதான்.
Comments
Post a Comment