Y Gee Mahendra's Paritchaikku Neramachu Stage Drama Press Meet Stills சிவாஜி நடித்த 'பரீட்சைக்கு நேரமாச்சு' - மீண்டும் நாடகமாக அரங்கேறுகிறது!!!

10th of September 2014
சென்னை:மேடை நாடகமாக அரங்கேறி, பெரும் அவரவெற்பை பெற்று, பிறகு சிவாஜி கணேசனின் நடிப்பில் திரைப்படமாக  வெளிவந்த மாபெரும் வெற்றிப் பெற்ற  'பரீட்சைக்கு மேரமாச்சு', மீண்டும் மேடை நாடகமாக அரங்கேறுகிறது.

ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையான ஒய்.ஜி.பார்த்தசாரதி 1978-ம் ஆண்டு பரீட்சைக்கு நேரமாச்சு என்னும் நாடகத்தை இயக்கி, அதில் நடித்திருந்தார். இந்நாடகம் அப்போது பெரும் வரவேற்பு பெற்றது. இதை திரைப்படமாக உருவாக்க நினைத்த அவர் நடிகர் திலகம் சிவாஜியிடம் இக்கதையை கூறி, 1983-ல் திரைப்படமாக உருவாக்கினார். அந்த படம் திரையில் வெற்றிகரமாக ஓடியது.


இந்நிலையில் பரீட்சைக்கு நேரமாச்சு என்னும் நாடகத்தை ஒய்.ஜி.மகேந்திரன், மீண்டும் அரங்கேற்றுகிறார்.

வரும் செப்டம்பர் 14ஆம் தேதி மாலை  6.30 மணிக்கு சென்னை, தியாகராயா நகரில் உள்ல வாணி மஹாலில் இந்த நாடகம் நடைபெறுகிறது. இந்த நாடகத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் புராப்பார்டிஸ் நிறுவனம் செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்ரீராம் புரப்பர்டீஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் பரீட்சைக்கு நேரமாச்சு நாடகத்தில் நடிக்கும் முக்கிய நடிகர், நடிகைகள் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய ஒய்.ஜி.மகேந்திரன், "இதற்கு முன் உருவான பரீட்சைக்கு நேரமாச்சு நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நாடகம் என் தந்தை உருவாக்கியது. அதலால் இந்நாடகத்தை நான் மீண்டும் உருவாக்க ஆசைப்படுகிறேன். தற்போது உள்ள மக்கள் ரசிக்கும்படி உருவாக்கி உலகம் முழுவதும் இந்நாடகத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்.

நாடகம் என்பது நடிகர்களின் திறமையை வெளிப்படுத்தக் கூடியது. தற்போதுள்ள டெக்னாலஜியால் நடிப்பின் திறமை தெரியாது. சினிமா என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கினால் தான் அழகாக இருக்கும்.

நாடகம் தற்போது திரையுலக பிரபலங்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. நாடகத்தில் பிரபலங்கள் நடிக்காததற்கு காரணம் இங்கு சம்பளம் குறைவு. நாங்கள் எல்லாம் சபாவை நம்பிதான் இருக்கிறோம். இங்கு குறைந்த சம்பளம் தான். சினிமாவில் அதிக சம்பளம் வாங்குவதால் நடிக்க முடியாமல் இருக்கிறது.

முதலில் இந்த நாடகத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் அவர் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாமல் இருக்கிறது. பிறகு ரஜினியை ஒருநாள் சந்திக்கும் போது நாம் ஒரு நாடகத்தை உருவாக்கலாம் என்று கூறினார். அவருக்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளேன். தற்போது அவர் லிங்கா படத்தில் பிசியாக இருப்பதால் அதை முடித்து விட்டு நடிப்பார் என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்தார்.




 

 





Comments