மெட்ராஸ்’ படத்திற்கு U/A சான்றிதழ்!!!


13th of September 2014
சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புக் ஆளாகியுள்ளது கார்த்தி நடித்துள்ள ‘மெட்ராஸ்’ திரைப்படம். ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப்படத்தில் வடசென்னையில் இருந்து ஐ.டி.கம்பெனிக்கு செல்லும் வாலிபனாக கார்த்தி நடித்திருக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஜூலை இறுதியிலேயே இந்தப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சற்று தாமதமானதால் தற்போது செப்-26ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது. கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்துமாத இடைவெளியில் வெளியாகிறது ‘மெட்ராஸ்’..

Comments