சுசீந்திரன் படத்திற்கு ‘U’ சான்றிதழ்!!!

18th of September 2014
சென்னை:கிரிக்கெட் விளையாட்டின் இன்னொரு முகத்தை, கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் அறியாத அதன் உள்ளே ஊடுருவி இருக்கும் அரசியலை தனது பாணியில் ‘ஜீவா’ என்ற பெயரில் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.. விஷ்ணு, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
 
சுசீந்திரனும் ஆர்யாவும் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தை வாங்கிய விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி மூலமாக வெளியிடுகிறார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் அளித்துள்ளனர். வரும் செப்டம்பர்-26ஆம் தேதி கார்த்தியின் ‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாகும் அதே தினத்தில் ‘ஜீவா’வும் வெளியாகிறது.

Comments