2nd of September 2014
சென்னை:அரிமா நம்பி’ படத்தின் வெற்றியின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் அடுத்ததாக ‘சிகரம் தொடு’ படம் மூலம் சிகரம் தொட தயாராகிவிட்டார் விக்ரம் பிரபு.. ‘தூங்கா நகரம்’ படத்தை இயக்கிய கௌரவ் தான் இந்தப்படத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்.
இன்னொரு சிறப்பான அம்சம் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு. கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடித்துள்ளார். கூடவே இந்தப்படத்திற்கு சத்யராஜின் நடிப்பும் டி.இமானின் இசையும் பக்கபலமாக இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை..
இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தை இந்த செப்டம்பர் மாதமே திரையிடவும் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment