Stars at Jumbo 3D Movie Launch Photos!!! அம்புலி 3டி' பட இயக்குனர்களின் மற்றொரு 3டி படம் 'ஜம்போ 3டி'!!!

2nd of September 2014
சென்னை:Tags : Jumbo 3D Movie Pooja Photos, Jumbo 3D New Tamil Movie Launch images, Jumbo 3D Film Poojai Event Stills, Jumbo 3D Movie Launch Function Gallery, Jumbo 3D Movie Shooting Start Pictures.
 
தமிழ் திரை பட  உலகில் 3D முறையில் வெளி வரும் படங்களுக்கு சமீப கால முன்னோடியாக இருந்தது ' அம்புலி' திரைப்படமாகும். அந்த படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் தங்களது அடுத்த படமான 'ஆ' படத்தின்  வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதே வேளையில் தங்களது மற்றொரு படமான 'ஜம்போ  3D' படத்தின் துவக்கத்தை திரை உலக பிரபலங்கள் சூழ கொண்டாடினர்.

சங்கர் பிரதர்ஸ்  மற்றும் எம் எஸ் ஜி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படம் இந்திய -ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் படமாகும்.தொண்ணூறு சதவீதம் ஜப்பான் நாட்டில் படமாக்கபட உள்ள 'ஜம்போ 3 D'  படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறுகையில் "தமிழ் நாட்டு மக்களின்  கலாசாரத்தின் பின்னணியை ஜப்பானியமக்கள் திரை படங்கள் மூலம் பெரிதளவுக்கு அறிந்து வைத்து உள்ளனர்.தமிழ் படங்களுக்கு அங்கே பிரத்தியேகமாக ஒரு மார்க்கெட்உருவாக்க வேண்டும் என்பதே டோக்யோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் என்னுடைய கனவும் லட்சியமும் கூட." என்க்கிறார்.

இந்திய ஜப்பான் கலாசார தூதுவர் கயோலா புருகொவா "இந்திய திரை பட துறையினருடன்  குறிப்பாக தமிழ் திரைப்பட உலகினருடன் இணைந்து செயலாற்றுவது எங்களுக்கு மிகவும் பெருமை. தமிழ் படங்களில் தென்படும் உற்சாகம் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. எங்கள் நாட்டின் பிரதான கலாசார பெருமை என கருதப்படும்  மறைந்த பிரபல இயக்குனர் அகிரா  குருசவா அவர்களின் நினைவாக அவரது திரைப்படங்களின் கண்காட்சியை சென்னையில் நடத்த உள்ளோம்." ன்றார்.

மானாட மயிலாட தொலை காட்சி நிகழ்ச்சி மற்றும் 'அம்புலி'  'ஆ' ஆகிய
 திரைப்படங்களில் நாயகனாக நடித்த கோகுல், இப்படத்தில்  நாயகனாக நடிக்க அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்  பேபி ஹம்சிகாஹரி நடிக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ்.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஹரி மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கே ஒக்கிடா தயாரிக்கும் இப்படத்தை ஹரி-ஹரீஷ் இயக்குகிறார்கள்.

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் நமீதா, சுகன்யா, இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.










 











































 

Comments