Jaihind 2 Audio Launch Stillsமேஜர் முகுந்தின் குடும்பத்தை கெளரவப்படுத்திய ;ஜெய்ஹிந்த் 2’ இசை வெளியீட்டு விழா!!!

20th of September 2014
சென்னை:Tags : Jaihind 2 Audio Release Gallery, Jaihind 2 Songs Launch Event Stills, Jaihind 2 Movie Audio Release Photos, Jaihind 2 Audio CD Launch Pictures, Jaihind 2 Audio Release Function images.
 
அர்ஜூன் இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் 2’. இதில் கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார்.

புதுமுகமாக சிம்ரன்கபூர் என்ற முன்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். மற்றும் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர்  நடிக்கிறார்கள்.


கன்னட திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளரான அர்ஜுன் ஜெனியா, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வைரமுத்து, பா.விஜய் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே, தேசத்திற்காக வீர மரணமடைந்த மேஜர் முகுந்தை கெளரவிக்கும் விதத்தில், அவர்களுடைய மனைவி, குழந்தை, அப்பா, அம்மா ஆகியோரை ஜெய்ஹிந்த் 2 படக்குழுவினர்கள் கெளரவப்படுத்தினார்கள். மேலும் இவ்விழாவில் இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளருமான முரளி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

விழாவில் அர்ஜுன் பேசுகையில், “
இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றாற்போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம் தான் வந்தது.

தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன் முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒத்துக்கொண்டார்கள்.

அவர்களை மேடைக்கு  அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றுள்ளது.” என்றார்.

மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் பேசுகையில், “ஜென்டில் மேன் படத்தை பார்த்து அர்ஜுனின்  தீவிர ரசிகரான முகுந்த் ஆக்ஷன் படங்களை விரும்பி பார்ப்பான் இந்த ஜெய்ஹிந்த் படத்தை பார்க்க அவன் இல்லை இருந்தாலும் இந்த விழாவில் நாங்கள்கலந்து கொண்டதே எங்களுக்கு மகிழ்ச்சி.” என்றார்.

இயக்குநர் பாலா பேசுகையில், “வழக்கமாக இது மாதிரி விழாக்களுக்கு நான் செல்வதை தவிர்ப்பேன் அர்ஜுன் என்னிடம் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதை சொன்ன உடனே  நான் ஒத்துக்கொண்டேன்.

நான் இதுவரை எந்த சினிமா காரர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டது இல்லை. எடுக்க வேண்டும் என்றும் விரும்பியதில்லை. ஆனால், மேஜர் முகுந்த் குடும்பத்தாருடன் போட்டோ எடுத்துக் கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.” என்று சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டார்.

தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு பேசுகையில், “அர்ஜுன் இயக்கத்தில் வரும் எட்டாவது படம் என்றார்கள் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான எல்லாப் படங்களும் வெற்றிப் பெற்றுள்ளது இந்த படமும் வெற்றிபெறும்.” என்று பாராட்டினார்.

விழாவில் ஐஸ்வர்யா அர்ஜுன், மனோபாலா, கானாபாலா, மயில்சாமி, ஆகியோரும் பேசினார்கள்.

இயக்குனர் பாலா இசைத் தட்டை வெளியிட  மேஜர் முகுந்தின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


 
 

 

 
 

 

 
 

 

 

Comments