I Audio Launch Stills!!! ஐ பட ஆடியோ வெளியீட்டு விழா - பாதியிலேயே நடையைக்கட்டிய அர்னால்டு!!!

16th of September 2014
சென்னை:Tags : Arnold at I Audio Release images, I Audio Launch Function Gallery, Rajini Launches I Movie Audio CD Pictures, I Audio Release Function Stills, I Audio Launch PhotosRajini With Arnold in I Movie Songs Release Event, Shankar in I Audio Launch Pics.
 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில், ஆஸ்கார் ரசிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, கலந்துக்கொள்கிறார் என்று கடந்த சில நாட்களாகவே ஐ படக்குழுவினர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர்.
அவர்கள் சொன்னது போலவே, நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஐ இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு கலந்துக்கொண்டார். ஆனால், அவர் எதற்காக வந்தாரோ, அவரை  எதற்காக வரவைத்தார்களோ, அதையே செய்யாமல், பாதி நிகழ்ச்சியிலேயே  நடையைக் கட்டி விட்டார்.

அதாவது, அர்னால்டை இங்கு  அழைத்து வந்ததே, பாடல்கள் குறுந்தகடை வெளியிட தான், ஆனால் மனுஷன் அதையே செய்யாமல், பாதி நிகழ்ச்சியிலே கிளம்பிவிட்டது, நிகழ்ச்சியைக் காண வந்திருந்த அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அர்னால்டு பாதியிலேயே, படல்கள் வெளியீட்டுக்கு முன்பாகவே கிளம்புவதற்கு முழுக்க முழுக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டார்களே காரணம். சொன்ன நேரத்தில் நிகழ்ச்சியை ஆரம்பிக்காமல், பல மணி நேரம் காலதாமதமாக நிகழ்ச்சியை ஆரம்பித்ததோடு, நிகழ்ச்சியை நடத்துவதிலும் பல சொதப்பல்களை செய்து, மொத்தத்தில் நிகழ்ச்சியையே சொதப்பிவிட்டார்கள்.

3.30 மணியில் இருந்து 5 மணிக்குள்ளாக, நிகழ்ச்சி அரங்கத்திற்குள் பார்வையாளர்கள் வந்துவிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கும் இதையே தான் கூறியிருந்தார்கள். அவர்கள் சொன்னதைப் போலவே, அனைவரும் 5 மணிக்குள் நிகழ்ச்சி அரங்கத்திற்குள் அசெம்பெளியாகிவிட, நிகழ்ச்சியோ, இரவு 8 மணிக்குத் தான் தொடங்கியது.

சரி, லேட்டாக தொடங்கினாலும் லேட்டஸ்டாக நிகழ்ச்சியை நடத்துவார்களோ என்று நினைத்தால், அங்கேயும் பல குளறுபடிகளை செய்து, தட்டு தடுமாறி நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்தது. இதற்கு நடுவே, அர்னால்டு வந்திருக்கிறாரே, என்று ஆணழகன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள், அதைப் பார்த்து ரசித்த அர்னால்டு, திடீரென்று மேடைக்கு சென்று சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றுவிட்டார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர்கள், அர்னால்டை சில நமிடங்கள் காத்திருக்க சொல்லியும் அவர் அதை கேட்காமல் சென்றுவிட்டார்.

அர்னால்டு உடன் கலந்துக்கொண்ட ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் ஆகியோர் இசை தட்டை வெளியிட்டார்கள்.

மேலும், சரத்குமார், தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர், தெலுங்கு நடிகர் ராணா, இவர்கள் யாரும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டதாக அடிக்கடி சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.

ஒட்டு மொத்தத்தில் ஐ பட ஆடியோ விழா, அலங்கோல விழாவாக தான் நடந்தது.

 

 
  











 









 
 

Comments