Enakkul Oruvan Audio Launch Photos!!! எனக்குள் ஒருவன் இசை வெளியீடு - புகைப்படங்கள்!!!

8th of September 2014
சென்னை:Tags : Enakkul Oruvan Audio Release Gallery, Enakkul Oruvan Songs Launch Event Stills, Enakkul Oruvan Movie Audio Release Photos, Enakkul Oruvan Audio CD Launch Pictures, Enakkul Oruvan Audio Release Function images.
 





  



 





 


 

 

 

 

 

 

 

 

 



 

 



 

 



 

 

 

 



 

 

 








Tags : Enakkul Oruvan Audio Release Gallery, Enakkul Oruvan Songs Launch Event Stills, Enakkul Oruvan Movie Audio Release Photos, Enakkul Oruvan Audio CD Launch Pictures, Enakkul Oruvan Audio Release Function images
.
கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் லூசியா. அதனை இப்போது 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். சித்தார்த், தீபா சன்னிதி நடிக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் பிரசாத் ராமர் இயக்குகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கிறார். லூசியா படத்தின் கதையை சிறிதும் மாற்றாமல் அப்படியே எடுத்துவருவதாக சொல்கிறார் இயக்குனர் பிரசாத் ராமர்.
 
அவர் மேலும் கூறியதாவது: லூசியாவின் ஒரிஜினல் கதையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தமிழுக்கு தேவையான சின்ன சின்ன மாற்றங்கள் இருக்கும். தமிழ் ஆடியன்ஸ் விரும்பும் சில விஷங்களை சேர்த்திருக்கிறோம் அவ்வளவுதான். திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படங்களிலேயே இது அதிக பட்ஜெட் என்பது உண்மைதான். அது கதைக்கு தேவைப்படுகிற பட்ஜெட்தான். கதையை தாண்டி ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை.
 
காதல்தான் இந்த கதையின் அடிப்படையான விஷயம். அதற்கு சித்தார்த் மிக பொருத்தமான ஆர்ட்டிஸ்ட். லூசியாவை பார்த்துவிட்டு இந்தப் படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இந்த ப்ராஜக்ட்டை ஆரம்பித்து வைத்ததே அவர்தான். இதற்காக நிறைய ஒர்க்கவுட் பண்ணினார். தீபா சன்னிதியுடனான அவரது காதல் காட்சிகள் நீண்ட நாட்களுக்கு பேசப்படுவதாக இருக்கும்.
 
கமல் சாரின் எனக்குள் ஒருவன் டைட்டிலை வைத்திருக்கிறோம். இந்த கதைக்கு அந்த தலைப்பு பொருத்தமாக இருந்தால்தான் வைத்தோம். மற்றபடி கமல் சார் படத்தின் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. என்கிறார் பிரசாத் ராமர்.

Comments