கத்தி பிரச்சனை பற்றி மூச் விடக்கூடாது; விஜய்-முருகதாஸை மிரட்டிய லைகா நிறுவனம்!

20th of September 2014
சென்னை:பல பிரச்சனைகளுக்கு பிறகு கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா  கோலாகலமாக நடைபெற்றது. இதில பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். லைகா நிறுவனத்திற்கு எதிராக கிளம்பியிருந்த பல பிரச்சனைகளுக்கு நேற்றும் விளக்கம் அளித்தனர் முருகதாஸ், விஜய், சுபாஷ்கரன் அவர்கள். ஆனால் இப்படத்தின் பிரச்சனையை பற்றி பேசியதும் இதை இங்கே பேசக்கூடாதுன்னு சொன்னாங்க என்றும் லைகாவை போட்டு கொடுத்துவிட்டார் இயக்குநர் முருகதாஸ்.
 
முருகதாஸ் அப்படி கூற காரணம் இல்லாமலா இருந்திருக்கும் கத்தி படம் ஜெயா டிவிக்கு கை மாறியதே இவர்கள் இருவரால்தான் என்ற கடுப்பிலும் லைகா இந்த மாதிரி செய்திருக்கலாம், ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசராமல் தன் மனதில் பட்டதை மேடையில் பேசி அசத்திவிட்டார்கள் விஜய்யும், முருகதாஸும் பின் பேச வந்த சுபாஷ்கரன் கடமைக்கு பாம்பு, பசு, விஷம் என்று பேசி குழப்பிவிட்டார்…

விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்கள் அனைவரும் உஷாராகத்தான் வந்துள்ளனர், ஏனென்றால் விஜய்க்கு வலது பக்கத்தில் முருகதாஸும் இடது பக்கத்தில் விஜய் மனைவியும் அமர்ந்திருந்தனர் லைகா சுபாஷ்கரன் முருகதாஸுக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்க வந்த நட்சத்திரங்கள் அனைவரும் முதலில் விஜய்க்கு கை கொடுத்து வாழ்த்து கூறி அடுத்து முருகதாஸுக்கு வாழ்த்து கூறிவிட்டு அப்படியே ஓரம்கட்டி விடுகிறார்கள். இதுவரை ஒரு தமிழ் சினிமா வரலாற்றில் தயாரிப்பாளரை கண்டு கொள்ளாத அதுவும் ஒரு பில்லியன் டாலர்ஸ் வருமானம் வரும் தயாரிப்பாளரை கண்டு கொள்ளாத முதல் தமிழ் சினிமா விழா கத்தியாகத்தான் இருக்க முடியும். எதற்கு வம்பு கை கொடுத்து அப்புறம் உருவ பொம்மையை எரிக்கவா என்று கேள்வி கேட்கலாம் அதுவும் சரிதான்.

Comments