நகைச்சுவை நடிகர் செந்தில் வில்லனாக நடிக்கும் 'மகாராணி கோட்டை!!!

30th of September 2014
சென்னை:நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் 'மகாராணி கோட்டை' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில் ஹீரோவாக ரிச்சர்டு நடிக்கிறார்.

சென்னையிலிருந்து ஐந்து பேர் கிராமத்திற்கு வேலை விஷயமாக வருகின்றனர். நான்கு இளைஞர்களும் இளம் பெண்ணும் அடங்கிய அந்த குழுவினர் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள ஒரு பங்களாவை விலைக்கு வாங்க்குகின்ற்னார். ஊர்மக்கள் அதனால் பீதியடைந்தர். பேய் வாழும் பங்களா என கிராம மக்கள் பேசிக் கொள்ளும் அந்த பங்களாவில் ஐவரும் தங்குகின்றனர். ஊர் மக்கள் கூறியது போல், இரவில் அங்கு பேய் நடமாடுவதற்கான அறிகுறி தெரிகின்றது. அதனால் ஐவரும் பயப்படுகின்றனர்.


இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெறும் சம்பவ்னக்களால் அதிர்ச்சி அடையும் அவர்கள் அதில் இருந்து மீண்டார்களா? மாண்டார்களா? என்பதை நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் படமாக வினோத் குமார் இயக்கி உள்ளார்.

செந்தில் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரிச்சர்டு நாயகனாக நடிக்கிறார். அனி பிரின்ஸ், நீனா குருப்பா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் கும்கி அஸ்வின், வையாபுரி, வேல்முருகன், பாவா லட்சுமணன், பெஞ்சமின், போண்டாமணி, சாய் சரவணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யு.கே.முரளி இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை அம்பாசங்கர், ராகின்ஜாக், சந்திரசேகர் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றார்கள். சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்ய, சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார்.

தனமலர் கிரியேஷன்ஸ் சார்பில், சுப்ரமணியம், தனமலர் ஆகிய இருவரும் தயாரிக்கும் இப்படத்தை வினோத்குமார், கதை, திரைக்கதை, வச்னாம் எழுதி இயக்குகிறார். இவர் தெலுங்கில் வின் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா, சென்னை அபிராமி திரையரங்கில் நடைபெற்றது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Comments