1st of September 2014
சென்னை:சர்ச்சைகள், எதிர்ப்புகள் என ஒருபுறம் ‘கத்தி’யைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வந்தாலும், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் தீபாவளி வெளியீடை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பிஸியாக இயங்கி வருகிறது ஏ.ஆர்.முருகதாஸின் படை! ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. சின்ன சின்ன பேட்ஜ் ஒர்க்குகளுக்கான காட்சிகளும், அனிருத் இசையில் விஜய் கடைசியாகப் பாடிய பாடல் ஒன்றின் ஷூட்டிங் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளன. இன்னொருபுறம் ‘கத்தி’ படத்திற்கான போஸ்ட்புரொடக்ஷன் வேலைகளும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ‘கத்தி’ படத்தைப் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில்... ரொம்பவும் சுருக்கமாக ‘‘கத்தி படத்தின் முதல் பகுதி வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. தற்போது இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ‘கத்தி’ படத்தின் பாதி டப்பிங் வேலைகள் முடிவடைந்து, இரண்டாவது பாதி டப்பிங் வேலைகள் ஸ்பீடாக நடந்து கொண்டிருக்கின்றன. ஷங்கர், விக்ரமின் ‘ஐ’யுடன் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் ‘கத்தி’ தீபாவளிக்கு ஒன்றாக வெளியாவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் முருதாஸின் இந்த அறவிப்பின் மூலம் தெரிய வருகிறது.

Comments
Post a Comment