அனுஷ்காவின் ‘தங்கை’யை மணக்கிறார் அட்லீ!!!

8th of September 2014
சென்னை:ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. மேலும் அவரிடமிருந்து வெளியே வந்து தனியாக படம் இயக்கி வெற்றி பெற்ற உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இதை ‘கடந்த வருடம் ‘ அவர் இயக்கிய ‘ராஜாராணி’ படத்தின் வெற்றி, கதைகதையாய் சொல்லும்..

ஆனால் இவர் சொல்ல மறந்த கதை ஒன்று இருக்கிறது.. அது சின்னத்திரையிலும் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடித்துவரும் நடிகை பிரியாவை, எட்டு வருடங்களாக இவர் காதலித்த கதை. ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தாரே அவரே தான் இந்த பிரியா.

இப்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் ஆர்யா, நயன்தாரா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது.

Comments