'ஐ'-யை முந்தியது 'கத்தி'; ஏ.ஆர் ரகுமானை முந்தியது அனிருத்!!!

21st of September 2014
சென்னை:இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது அதைப்போலவே கத்தி இசையும் முதலிடம் பிடித்துள்ளது.

'3' திரைப்படம் மூலம் அறிமுகமான அனிருத், அத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூடியூபில் ஹிட் ஆனதால், உலகளவில் பிரபலமானார்.  தொடர்ந்து எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி அகிய திரைப்படங்களில் அனிருத் இசை ஹிட் ஆனது. விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'கத்தி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே பாடல்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
 
சில நாட்களுக்கு முன், 'கத்தி' திரைப்படத்தில் இடம்பெறும் 'லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள' பாடல் லீக் ஆனது ( ஆக்கப்பட்டது) அந்தப் பாடல் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்றது.   கத்தி திரைப்படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியான சில மணி நேரங்களிலேயே, பாடல்களை முறையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள உலகளவில் பலர் பயன்படுத்து ஐ-டியூன்ஸ் இணையதளத்தில், கத்தி பாடல்கள், இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தன.  இதற்கு முன் அனிருத் இசையமைத்த 5 திரைப்பட பாடல்களுமே ஐ-டியூன்ஸ் தளத்தில், வெளியான அன்று முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து ஆறாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.   

ரசிகர்களுக்கும், கத்தி வாய்ப்பிற்காக ஏ.ஆர். முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிருத் நன்றி தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் வெளியான ஏ.ஆர் ரகுமானின் 'ஐ' படப் பாடல்கள், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. பாலிவுட் படங்களான பாங் பாங், ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களின் பாடல்களும் ஐ டியூன்ஸ் இணையதளத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

Comments