26th of September 2014
சென்னை:தமிழ், தெலுங்கு இந்த இரண்டு மொழிகளில் கவனம் செலுத்தினால் போதும் என்கிற நிலையில் இருந்த ஹன்சிகா, தற்போது தன் மனநிலையை சற்றே மாற்றிக்கொண்டுள்ளாராம். அதற்காக அசின் செய்த மாதிரி கோலிவுட்டை விட்டுவிட்டு பாலிவுட்டுக்கு போய்விடுவார் என பயப்பட தேவையில்லை.
இப்போது ஹன்சிகாவை தேடி வந்துள்ள வாய்ப்பு மலையாளத்தில் ‘சத்தம் சிவன்’ படத்தில் நடிப்பதற்காக.. அழைத்திருப்பவர் பிரபல கமர்ஷியல் இயக்குனரும் ஆக்ஷன் படங்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவருமான இயக்குனர் ஜோஷி. கதாநாயகன் நமது ஜனப்ரிய நாயகன் திலீப் தான்.. கடந்த மாதம் வெளியான ‘அவதாரம்’என்ற ஹிட் படத்தை இணைந்து கொடுத்து தெம்பாக நிற்பவர்கள்..
முன்பு தமிழில் பீக்கில் இருந்தபோதும் கூட, இவரது அழைப்பை ஏற்று அமலாபாலும், லட்சுமிமேனனும் மலையாளத்துக்கு சென்று ஆளுக்கொரு ஹிட் படத்தில் நடித்து வெற்றிபெற்றது நாடறிந்த கதை. அதனால் ஹன்சிகாவும் மலையாள திரையுலகில் நுழைய வாய்ப்பு பலமாகவே இருக்கிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரலாம்.. எதிர்பார்த்திருங்கள் மக்களே..

Comments
Post a Comment