3rd of September 2014
சென்னை:நீண்ட நாட்களாகவே ஜீவா நடித்துவரும் ‘யான்’ படம் ஒரு எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே வந்தது. காரணம் ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குனராக தன்னை உருமாற்றி கொண்டிருக்கும் படம் என்பதுதான்.. தவிர படம் எந்த வகையை சேர்ந்தது என்கிற ஆர்வத்தையும் கிளப்பி வந்தது..
அதற்கெல்லாம் இன்று வெளியாகி இருக்கும் ‘யான்’ படத்தின் ட்ரெய்லர் விடை சொல்லியிருக்கிறது. இந்தப்படத்தில் ‘போலீஸ்’ அதிகாரியாக நடிக்கிறார் ஜீவா. அவர் போலீஸ் வேடத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவாவுக்கு ஜோடியாக வரும் துளசி ட்ரெய்லரிலேயே நம் மனதை அள்ளுகிறார். ஆரம்பத்தில் காதல் காட்சிகளால் நம் மனதை குளிரவைக்கும் ட்ரெய்லர் அடுத்து அப்படியே ஆக்ஷன் பிளாக்கில் அதிரவைக்கிறது. நிச்சயம் ஜீவா ரசிகர்களுக்கு செமத்தியான தீனி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
Comments
Post a Comment