அனேகன்’ ஆடியோ ரிலீஸ் அக்டோபரில்!!!

28th of September 2014
சென்னை:அனேகன்’ படத்திற்கு டப்பிங், மிக்ஸிங் என அலங்கார கவசங்கள் மாட்டுகின்ற  இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார் இயக்குனர்  கே.வி.ஆனந்த்.. படத்தின் ஆடியோ ரிலீசை வரும் அக்டோபர் மாதத்தில், குறிப்பாக தீபாவளியை ஒட்டி நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த். படத்தை நவம்பரில் வெளியிட திட்டமாம்.

வதந்தியா அல்லது யூகமா என்று சொல்லமுடியாத அளவுக்கு இன்னொரு விஷயமாக, கார்த்தி இந்தப்படத்தின் கதையை சொல்வதற்காக குரல் கொடுத்திருக்கிறார்  என்று சொல்லப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை என்கிறது இயக்குனர் தரப்பு. தனுஷ், அமிரா டஸ்டர் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்

Comments