18th of September 2014*
சென்னை:வீணாக ஏன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்கிற பெயரில் தண்ணீரையும் செலவழித்து உடலையும் கெடுத்துக்கொள்கிறீர்கள் என்று அதற்கு மாற்றாக மலையாள நடிகர் பாஹத் பாசில் கண்டுபிடித்த ஐடியாதான் ‘மை ட்ரீ சேலஞ்ச்.. மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக மரக்கன்றை நட்டுவைத்துவிட்டு, அவர் மெகாஸ்டார் மம்முட்டிக்கு சவால் விட்டார்.
அதை நிறைவேற்றிய மம்முட்டியோ தனது சவாலை விஜய், சூர்யா, ஷாருக்கான் மீது திருப்பிவிட்டார். விஜய்யும் சூர்யாவும் சவாலை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளனர். சூர்யா மம்முட்டிக்கு நன்றி சொல்லி இணையத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதை பார்த்த மம்முட்டி பதிலுக்கு சூர்யாவுக்கு நன்றி சொல்லி அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்துள்ளாராம்.
Comments
Post a Comment