குழந்தைப் பெற்றுக்கொண்டு தான் திருமணமே செய்து கொள்வேன் - ஸ்ருதிஹாசன்!!!

25th of September 2014
சென்னை:திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வேன், என்று கூறி நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், தனது அப்பாவான நடிகர் கமல்ஹாசன் மற்றும் தனது அம்மா சரிகா, இடையே ஏற்பட்ட பிரிவு குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.


தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன்.” என்றார்.

Comments